74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாட்டு மக்களிடையே மோடி உரை
New Delhi: தேசம் சுதந்திரமடைந்து 74வது ஆண்டினை இன்று கொண்டாடி வருகின்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையை செங்கோட்டையில் இன்று நிகழ்த்தினார். அதில், “எல்லை கட்டுப்பாட்டு பகுதி, உண்மையான எல்லைக்கோடு வரை நாட்டின் இறையாண்மையை சவால் செய்தவர்களுக்கு இந்தியாவின் ராணுவ வீரர்கள், பொருத்தமான பதிலை அளித்திருந்தனர்.” என குறிப்பிட்டுள்ளார்.
“எல்லை கட்டுப்பாட்டு பகுதி(LoC), உண்மையான எல்லைக்கோடு வரை(LAC), நாட்டின் இறையான்மைக்கு சவால் விடுபவர்களை நம்முடைய வீரர்கள் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பொருத்தமான பதிலை அளித்துள்ளனர்” என்று பிரதமர் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் சீனாவுடனான மோதலைப் பற்றி குறிப்பிடுகையில், நாட்டிற்காக 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், நமது வீரர்கள் என்ன செய்ய முடியும் என்றும், நாடு என்ன செய்ய முடியும் என்றும், உலகம் லடாக்கில் கண்டது. இன்று, அந்த துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் செங்கோட்டையிலிருந்து வணக்கம் செலுத்துவதாகவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் இறையான்மைக்கு எதிரான பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, விரிவாக்கமாக இருந்தாலும் சரி, இந்தியா இரண்டையும் எதிர்த்துப் போராடுகிறது, இந்தியாவின் சக்தி குறித்த உலக நம்பிக்கை வலுவடைந்து வருகிறது.” என பிரதமர் கூறியுள்ளார்.