Read in English
This Article is From May 13, 2019

"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து": கமல்ஹாசன் பேச்சு..!

முஸ்லீம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் இதை சொல்லவில்லை, காந்தியின் சிலைக்கு முன்னாள் இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

கமல்ஹாசன் இடைத்தேர்தலுக்காக கரூர் மாவட்டத்தில் கமல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Aravakurichi:

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, முதல்முறையாக மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலையும் அக்கட்சி சந்திக்கிறது.

இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நேற்றிரவு பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மே.19ஆம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், அரவக்குறிச்சியும் ஒரு தொகுதியாகும். இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதற்காக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நேற்று தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், முஸ்லீம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் இதை சொல்லவில்லை, காந்தியின் சிலைக்கு முன்னாள் இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisement

நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன் நான். அப்படி நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக்கொடியில் மூவர்ணமும் அப்படியே இருக்கும் ஒரு இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை, நான் நல்ல இந்தியன் என்பதை மார்தட்டிச் சொல்வேன்.

கடந்த 2017ல், வலதுசாரி குழுக்களிடம் பயங்கரவாதம் தொற்றியுள்ளன என்று கூறி பாஜகவுட் ஒரு மோதலை தூண்டும் வகையில் சர்ச்சையாக பேசினார். இதேபோல், கடந்த காலத்தில், இந்து, வலதுசாரி குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட மாட்டார்கள், எதிர்ப்பாளர்களுடன் ஒரு உரையாடலை மேற்கொள்பவர்கள். ஆனால், இப்போது அவர்கள் வன்முறையை கையில் எடுத்துள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

Advertisement

சில மாதங்களுக்கு பின்னர் அவர் கூறும்போது, நான் இந்து மதத்திற்கு மட்டுமல்ல எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல என்று கூறியிருந்தார்.

முன்னதாக, இந்த ஆண்டு கேரளாவின் சபரிமலை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகளை கமல்ஹாசன் விமர்சித்தார்.

Advertisement