New Delhi: இந்திய - அமெரிக்க இராணுவங்கள் இணைந்து பணியாற்ற வழி செய்யும் மிக முக்கிய ஒப்பந்தமான COMCASA (Communications Compatibility and Security Agreement) தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்க அரசு செயலாளர் மைக் போம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்று, ஒப்பந்தத்தை நிறைவேற்றினர்.
பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம், கடல் பகுதியை கண்காணிக்கும் ட்ரோனகளை இந்தியாவால் அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடியும்.