ராய்ட்டர்ஸ் நிறுவன புகைப்படக் கலைஞர்
ஹைலைட்ஸ்
- சித்திக் அஹமது டேனிஷ் - அனுமதியின்றி நுழைய முற்பட்டதாகக் கைது
- குண்டு வெடிப்பில் இறந்த மாணவியின் பெற்றோரை சந்திக்க முயன்றார்.
- குண்டு வெடிப்புக்குப் பின் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார்.
Colombo: இந்தியவைச் சேர்ந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் இலங்கையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டு வெடிப்பிற்கு பின் இலங்கையில் செய்தி சேகரிக்க சென்ற புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் சித்திக் அகமது டேனிஷ்னிஷ், நீர்கொழும்பு நகரில் உள்ள பள்ளியில் அனுமதியின்றி நுழைய முயற்சித்த போது கைது செய்யப்பட்டார்.
அனுமதியின்றி நுழைய முயற்சித்த காரணத்தினால் மே 15 வரை நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் செய்தி ஊடகத் தகவல்களின் படி, பத்திரிகையாளர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்த மாணவியின் பெற்றோரை பள்ளியில் சந்திக்க இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
பத்திரிகையாளர் தற்காலிகமாக ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து செய்து சேகரிக்க நியமிக்கப்பட்டவர்.