இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் மாஸ்கோவில் சந்தித்து கலந்துரையாடினர்
New Delhi: நேற்று இரண்டாவது முறையாக மாஸ்கோவில் சந்தித்துக்கொண்ட இந்தியா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், எல்லையில் நடத்து வரும் தொடர் பிரச்னைகள் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை பற்றி விவாதிக்க போதுமான அவகாசத்தை வழங்கவில்லை என வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த கூட்டத்தில் இருநாடுகளும் எல்லையில தற்போது உள்ள பதற்றத்தினை தவிர்க்க 5 அம்ச திட்டத்திற்கு ஓப்புதல் தெரிவித்துள்ளன.
இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்ட 5 அம்ச திட்டங்கள்;
- இந்தியா-சீனா உறவுகளை வளர்ப்பது தொடர்பான தலைவர்களின் ஒருமித்த தொடரிலிருந்து இரு தரப்பினரும் வழிகாட்டுதல்களை எடுக்க வேண்டும் என்று இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
- எல்லைப் பகுதிகளில் தற்போதைய நிலைமை இரு தரப்பினரின் நலனுக்காக இல்லை என்று இரு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். எனவே இரு தரப்பினரின் எல்லைப் படையினரும் தங்கள் உரையாடலைத் தொடர வேண்டும். சர்சைக்குரிய பகுதியிலிருந்து துருப்புக்களை விலக்கிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையற்ற பதற்றத்தினை தவிர்க்க வேண்டும்.
- சீனா-இந்தியா எல்லை விவகாரங்களில் இரு தரப்பினரும் தற்போதுள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு அமைதியை பேணுவார்கள். பதற்றத்தினை அதிகரிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என்று இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
- இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் சிறப்பு பிரதிநிதி பொறிமுறையின் மூலம் தொடர்ந்து உரையாடல் மற்றும் தொடர்பு கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்பாட்டு பொறிமுறையும் (WMCC) அதன் கூட்டங்களைத் தொடர வேண்டும் என்பதையும் அவர்கள் இந்த சூழலில் ஒப்புக் கொண்டனர்.
- நிலைமை தளர்த்தப்படுவதால், எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் புதிய நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை இரு தரப்பினரும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.