This Article is From May 26, 2020

லடாக் எல்லையில் அதிகளவிலான படைகளை குவிக்கும் இந்தியா, சீனா; நீடிக்கும் பதற்றம்!

இதுதொடர்பாக மூத்த ராணுவ அதிகாரிகள் கூறும்போது, பாங்காங் மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகளவில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

லடாக் எல்லையில் அதிகளவிலான படைகளை குவிக்கும் இந்தியா, சீனா; நீடிக்கும் பதற்றம்!

2017ல் டோக்லாம் நெருக்கடிக்குப் பின்னர் மிகப்பெரிய ராணுவ முகமாக மாறும் என்பதைக் குறிக்கிறது.

New Delhi:

கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் இந்திய மற்றும் சீன  ராணுவ படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலைப்பாடு 2017ல் டோக்லாம் நெருக்கடிக்குப் பின்னர் மிகப்பெரிய ராணுவ முகமாக மாறும் என்பதைக் குறிக்கிறது.

இதுதொடர்பாக மூத்த ராணுவ அதிகாரிகள் கூறும்போது, பாங்காங் மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகளவில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சீன ராணுவம் சுமார் 2,000 முதல் 2,500 ராணுவ வீரர்களை குவித்துள்ளதாக அறியப்படும் இரண்டு சர்ச்சைக்குரிய பகுதிகளிலும் தற்காலிக உள்கட்டமைப்பை படிப்படியாக மேம்படுத்துவதாக தெரிகிறது. 

இப்பகுதியில் இந்திய ராணுவத்தின் வலிமை நமது எதிரியை விட மிகச் சிறந்ததாக உள்ளது, "என்று ஒரு உயர் ராணுவ அதிகாரி கூறினார். 

கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள டார்புக்-ஷாயோக்-தவுலாத் பேக் ஓல்டி சாலை உட்பட பல முக்கிய புள்ளிகளைச் சுற்றி சீன படைகள் முகாமிட்டுள்ளது இந்திய ராணுவத்திற்கு கவலையாக உள்ளது.

”இது சாதாரண வகையான மீறல் அல்ல, தீவிரமானது” என்று ஓய்வு பெற்ற முன்னாள் வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா கூறுகிறார். கால்வான் போன்ற பகுதிகளுக்குள் சீன மீறல் கவலையை ஏற்ப்படுத்துவதாக அவர் கூறுகிறார். ஏனெனில் இப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்றார்.

சீன படையினரால் பல ஊடுருவல்கள் நடந்துள்ளன. ஆனால், இது கவலைக்குரிய ஒன்று. இது வழக்கமான நிலைப்பாடு அல்ல. இது ஒரு குழப்பமான சூழ்நிலை என்று காந்தா கூறினார். 

இரு படைகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதட்டத்தை சமாளிக்க பேச்சுவார்த்தை முயற்சிகளை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் பாங்காங் த்சோ, டெம்சோக் மற்றும் தவுலாத் பேக் ஓல்டி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் நேருக்கு நேர் தீவிரமாக கண்காணித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, 100 கூடாரங்களை சீன ராணுவம் அமைத்து வருவதாகவும், பதுங்குக் குழிகள் அமைக்கும் நோக்குடன் கன ரக இயந்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, இந்தியாவுடனான பிரச்னையை கூடிய விரைவில் சுமுகமாக தீா்த்துக் கொள்ள சீனா தயாராக இல்லை என்பதை வெளிக்காட்டுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பூடான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியில் இந்திய, சீன படைகள் இடையே கடந்த 2017-இல் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சுமாா் 73 நாள்களுக்கு போா்ப்பதற்றம் நீடித்தது. பின்னா், எல்லையில் அமைதியை பராமரிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதைத் தொடா்ந்து, அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

.