Read in English
This Article is From Jul 08, 2020

இந்தியா- சீனா விவகாரம்: பிரதமர் மோடியின் பழைய ட்விட்டை எடுத்து காங்., கிண்டல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சுர்ஜேவாலா சிங் தனது ட்விட்டர் பதிவில், 2013ல் குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி போட்ட ட்விட்டர் பதிவை அவருக்கு நினைவுப்படுத்தியுள்ளார். 

Advertisement
இந்தியா Posted by (with inputs from PTI)

இந்தியா- சீனா விவகாரம்: பிரதமர் மோடியின் பழைய ட்விட்டை எடுத்து காங்., கிண்டல்! (File)

Highlights

  • மோடியின் பழைய ட்விட்டை எடுத்து காங்., கிண்டல்!
  • முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி போட்ட ட்விட்டர் பதிவு
  • பிரதமரே, உங்களது வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
New Delhi:

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் மோதல் நடந்த பகுதிகளிலிருந்து இந்தியாவும், சீனாவும் பரஸ்பரமாக தங்களது வீரர்களை திரும்பப் பெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பழைய ட்விட்டர் பதிவை சுட்டிகாட்டி காங்கிரஸ் கட்சியினர் கேலி செய்து வருகின்றனர். 

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுர்ஜேவாலா சிங் தனது ட்விட்டர் பதிவில், 2013ல் குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி போட்ட ட்விட்டர் பதிவை அவருக்கு நினைவுப்படுத்தியுள்ளார். 

அந்த பதிவில், மரியாதைக்குறிய பிரதமரே, உங்களது வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்கள் வார்த்தைகளுக்கு ஏதும் அர்த்தமுள்ளதா? நமது படைகள் ஏன் நமது பகுதியிலிருந்து பின்வாங்குகின்றன என்று நீங்கள் கூறுவீர்களா? நாடே உங்களது பதில்களை எதிர்பார்க்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த மே.2013ல், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், சீனா தனது படைகளை திரும்ப பெற்றது, ஆனால், இந்தியப் பகுதியில் இருந்து ஏன் இந்திய படைகளும் திரும்ப் பெறப்படுகிறது என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது? நாம் ஏன் பின்வாங்குகிறோம்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

கால்வான் பகுதியின் pp14 இருந்து ஞாயிற்றுக்கிழமை சீனா தனது கூடாரத்தை கலைத்து, வீரர்களையும் திரும்பபெற்றது. கால்வான் பகுதியில் இருந்து 2 கி.மீ சீனா தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது. 
 

ஏற்கனவே இந்திய எல்லைக்குள் உறுதியாக இருந்தபோதிலும், இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஒரு இடையக மண்டலத்தை உருவாக்க ராணுவம் தனது வீரர்களை இதே தூரத்திற்கு நகர்த்துவதை மறுபரிசீலனை செய்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பழைய ட்விட் இணையத்தில் சுற்றி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் அதனை குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் நான் பிரதமர் மோடியுடன் நிற்கிறேன். பிரதமர் அவரது கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

தேசிய நலனைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில் அவருடன் சசி தரூர் மட்டும் கேள்வி எழுப்பவில்லை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து, சீன ஊடுருவல் குறித்து காங்கிரஸ் பலமுறை கேள்வி எழுப்பி வருகிறது. 

கடந்த மாதம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் போது, நமது எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை, நமது பகுதிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை, என்று பிரதமர் மோடி கூறியதை, எதிர்க்கட்சி மேற்கோள் காட்டி கடுமையாக விமர்சித்தன.  
 

Advertisement

With input from PTI

Advertisement