Read in English
This Article is From Sep 05, 2020

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தீர்வு காண அமெரிக்கா உதவ தயார்: டிரம்ப்!

இதனைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுவது இதுதான் முதல் முறை என சொல்லப்படுகின்றது.

Advertisement
உலகம் Edited by
New Delhi:

இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிலவிவரும் பதற்றமான சூழலை தவிர்க்க அமெரிக்க உதவ விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையின் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இரு நாடுகளிலும் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் நாங்கள் இந்த பிரச்னையில் இரு நாடுகளுக்கும் உதவ தயாராக இருக்கின்றோம் என டிரம் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து இரு நாடுகளுடனும் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்களும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து உரையாடியதைத் தொடர்ந்து டிரம்பின் கருந்து வெளிவந்துள்ளது.

இந்தியா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் சமீபத்தில் கலந்துரையாடினர்

Advertisement

கடந்த ஜூன் மாதத்தில் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தினைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. நிலைமையை சீராக்க ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நிலவி வந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுவது இதுதான் முதல் முறை என சொல்லப்படுகின்றது.

Advertisement
Advertisement