Read in English
This Article is From Sep 11, 2020

ராணுவம் எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது; ராகுல் காந்தி கேள்விக்கு பிபின் ராவத் பதில்!

"சீனர்கள் எங்கள் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். இந்திய அரசு அதை எப்போது திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது? அல்லது அதுவும் ஒரு 'கடவுளின் செயலுக்கு' விடப்படுமா?" என ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியையொட்டி ராவத்தின் கருத்து வெளிவந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

இந்தியாவின் படைகள் அனைத்திற்கும் தயாராக உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுவரும் விரும்பத்தகாத மாற்றங்கள் குறித்து இரு நாட்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எல்லைப் பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் மீது கடும் விமர்சனத்தினை முன்வைத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தகவல் பிபின் ராவத், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்றும், விரும்பத்தாகத வகையில் சீன தரப்பிலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில் அதனை எதிர்கொள்ள ஆயுதம் தாங்கிய படைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

"சீனர்கள் எங்கள் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். இந்திய அரசு அதை எப்போது திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது? அல்லது அதுவும் ஒரு 'கடவுளின் செயலுக்கு' விடப்படுமா?" என ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியையொட்டி ராவத்தின் கருத்து வெளிவந்துள்ளது.

முன்னதாக இரண்டாவது முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மாஸ்கோவில் எல்லை பிரச்னை குறித்து 5 அம்ச திட்டங்களுக்கு சம்மதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement