This Article is From Jun 01, 2020

லடாக் எல்லைப் பகுதியில் ஆயுதங்களை குவிக்கும் இந்தியா மற்றும் சீனா!

மூன்றாம் நாடுகளின் தலையீட்டை விரும்பாது, இரு நாடுகளும் ராஜதந்திர மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வுகாண முயன்ற போதிலும், எல்லையில் ராணுவ துறுப்புகளிடையே சர்ச்சை அதிகரித்து வருகின்றது.

லடாக் எல்லைப் பகுதியில் ஆயுதங்களை குவிக்கும் இந்தியா மற்றும் சீனா!

இந்தியா சீனாவினை எதிர்கொள்ளத் தனது துறுப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது

New Delhi:

உலக அளவில் இரண்டு பெரும் மக்கள் சக்திகளை கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியா இடையே சமீபமாக எல்லை பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளன. லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் இரு நாட்டு ராணுவமும் பயங்கர ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. கடந் 25 நாட்களுக்கும் மேலாக இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே பிரச்னை மேலெழுந்ததையடுத்து இந்த நடவடிக்கையை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.ifnno9vk

மூன்றாம் நாடுகளின் தலையீட்டை விரும்பாது, இரு நாடுகளும் ராஜதந்திர மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வுகாண முயன்ற போதிலும், எல்லையில் ராணுவ துறுப்புகளிடையே சர்ச்சை அதிகரித்து வருகின்றது.

பீரங்கி, காலாட்படை போர் வாகனங்கள் மற்றும் கனரக இராணுவ வாகனங்கள் போன்றவற்றினை சீனா, லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலை நிறுத்தி வைத்துள்ளது. இந்திய ராணுவமும் கூடுதல் துருப்புக்களையும், பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளது. பாங்காங் த்சோ, கால்வான் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்காமல் இந்தியா பின்வாங்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பகுதிகளில் சீன ராணுவம் 2,500 துறுப்புகளை முதல் கட்டமாக நிலைநிறுத்தியுள்ளதாகவும், அதன் பின்னர், அந்த பகுதிகளில் தற்காலிகமாக உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றிற்கான காரணங்கள் முழுமையாக தெரியவில்லை.

இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை கடுமையான வான்வழி கண்காணிப்பினை இந்த பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது.

இம்மாத தொடக்கத்தில் சீனா ராணுவவீரர்கள் இந்திய எல்லை பகுதிகளுக்குள் நுழைந்து பாங்கோங் த்சோ மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் முகாமிட்டுள்ளனர். சீன ராணுவத்தின் இந்த அத்துமீறலை இந்தியா கடுமையாக எதிர்த்ததுடன் அமைதி திரும்ப இந்த படைகளை சீனா திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சீன இராணுவம் டெம்சோக் மற்றும் தவுலத் பேக் ஓல்டி ஆகிய பகுதிகளிலும் தங்களது துறுப்புகளை அதிக அளவில் குவித்துள்ளது. இந்த பகுதிகள் ஏற்கெனவே இந்திய சீனா எல்லை பிரச்னை நடந்த இடமாகும்.

சீனா துறுப்புகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லையென்றாலும், பாங்காங் த்சோ பகுதியில் இருந்து 180 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு இராணுவ விமான நிலையத்தில் கட்டுமான நடவடிக்கைகளையும், இதர உள்கட்டமைப்புகளையும் சீனா அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மேம்படுத்தி வருகின்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன.

சீனா தனது தந்திரத்தினை பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கும். இந்திய இராணுவம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது, இப்பகுதியில் இயல்பு நிலையை நிலைமையை மீட்டெடுக்கும் வரை ராணுவம் பின்வாங்காது என மூத்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து சீனாவுடன் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

கால்வான் பள்ளத்தாக்கில் டார்புக்-ஷாயோக்-தவுலத் பேக் ஓல்டி சாலையை இணைக்கும் மற்றொரு சாலையை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பங்கோங் த்சோ ஏரியைச் சுற்றி மற்றொரு சாலையை அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.  மே 5-ம் தேதி சுமார் 250 இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.