বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 02, 2020

இந்தியா-சீனா எல்லை விவகாரம்; தளபதிகளுக்கிடையேயான 5-ம் சுற்று பேச்சுவார்த்தை இன்று!

பல ஆண்டுகளாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், மேற்கு லடாக்கின் பனி பாலைவனங்கள் முதல் கிழக்கில் அடர்ந்த காடு மற்றும் மலைகள் வரை செல்லும் 3,488 கி.மீ நீளமுள்ள எல்லையில் இந்தியாவும் சீனாவும் உடன்பட முடியவில்லை.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • ஜூன் 15 மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழப்பு
  • இந்திய மற்றும் சீனப் படைகள் இன்று காலை 11 மணிக்கு தளபதி மட்ட பேச்சுவார்த்
  • டெப்சாங் , கோக்ரா மற்றும் விரல்கள் பகுதியில் சீனாவின் துருப்புக்கள் உள்ளன
New Delhi:

ஜூன் 15 ம் தேதி லடாக்கின் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்  காரணமாக இரு நாடுகளும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியிலிருந்து பின்வாங்க ஒப்புக்கொண்டனர்.

லடாக்கின் விரல் மலைப்பகுதியிலிருந்து சீன ராணுவம் முழுமையாக விலகுவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்திய மற்றும் சீனப் படைகள் இன்று காலை 11 மணிக்கு தளபதி மட்ட பேச்சுவார்த்தைகளை மால்டோவில் நடத்தவுள்ளன. கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில் நாடுகளுக்கு இடையிலான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இதுவாகும்.

சமீபத்தில் சீனா, சர்ச்சைக்குரிய இடங்களிலிருந்து வீரர்கள் விலகிக்கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், கிழக்கு லடாக்கில் துருப்புக்களை அகற்றுவதற்கான செயல்முறை இன்னும் முடிக்கப்படவில்லை என்று இந்தியா வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது.

Advertisement

கடந்த வாரம், அரசாங்க வட்டாரங்கள் என்.டி.டி.வி-யிடம், மே மாதத்தில் எல்.ஏ.சி அருகே லடாக் நகருக்குள் ஊடுருவிய அனைத்து பகுதிகளிலிருந்தும் சீனா தனது துருப்புகளை திரும்பப் பெறவில்லை என்று கூறின.

பாங்காங் ஏரியிலுள்ள டெப்சாங் சமவெளிப் பகுதி, கோக்ரா மற்றும் விரல்கள் பகுதியில் சீனாவின் துருப்புக்கள் இன்னும் உள்ளன.

Advertisement

இப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க கடந்த சில வாரங்களில் பல சுற்று இராஜதந்திர மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

பல ஆண்டுகளாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், மேற்கு லடாக்கின் பனி பாலைவனங்கள் முதல் கிழக்கில் அடர்ந்த காடு மற்றும் மலைகள் வரை செல்லும் 3,488 கி.மீ நீளமுள்ள எல்லையில் இந்தியாவும் சீனாவும் உடன்பட முடியவில்லை.

Advertisement