This Article is From Jun 19, 2020

பேச்சுவார்த்தைக்குப் பின் 10 ராணுவ வீரர்களை விடுவித்ததா சீனா - உண்மை என்ன?

இந்த மோதலைத்தோடரந்து இந்திய சீன ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் 10 ராணுவ வீரர்களை விடுவித்ததா சீனா - உண்மை என்ன?

இந்திய சீன ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். (File photo)

New Delhi:

சமீபத்தில் லாடாக்கின் கிழக்கு பகுதியில், கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, வேறெந்த ராணுவ வீரர்களும் காணமல் போகவில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் மூன்று மேஜர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நேற்று மாலை  பத்து இந்திய ராணுவ வீரர்கள் சீன இராணுவத்தால் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால், இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

1962க்கு பிறகு இந்திய சீன எல்லையில் நடந்த உயிரிழப்பு சம்பவம் இதுவேயாகும். இந்த மோதலில் ராணுவ வீரர்கள் சிலர் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்த மோதலைத்தோடரந்து இந்திய சீன ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இந்தியா, லாடாக் எல்லைப்பகுதியில் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வந்தது. இதேபோல சீனாவும் எல்லையை ஒட்டிய பகுதிகளில் விரிவாக நடவடிக்கையை முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சுமார் 250 சீன மற்றும் இந்திய வீரர்கள் வன்முறையில் ஈடுபட்ட பின்னர் இப்பகுதியின் நிலைமை மோசமடைந்தது. பாங்கோங் த்சோவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து மே 9 ஆம் தேதி வடக்கு சிக்கிமில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.

.