Read in English
This Article is From Jun 18, 2020

லடாக்கில் இந்தியா - சீனா மோதல் வெடித்தது எப்படி? விவரிக்கும் செயற்கைக்கோள் வரைபடம்!

இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • லடாக்கில் இந்தியா - சீனா மோதல் வெடித்தது எப்படி?
  • இந்த மோதல் PP-14 அல்லது ரோந்து பகுதி 14 எனப்படும் ஒரு இடத்தில் நடந்தது,
  • எல்லைபகுதியில் சீனப் பக்கத்தில் ஒரு பெரிய கட்டமைப்பு இருப்பதை காட்டுகிறது
New Delhi:

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் வரைபடங்கள், இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் எப்படி வெடித்தது என்பதை விளக்குகிறது. 

இந்த மோதல் PP-14 அல்லது ரோந்து பகுதி 14 எனப்படும் ஒரு இடத்தில் நடந்துள்ளது, இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது.

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்கள் எல்லைப் பகுதியில் சீனப் பக்கத்தில் ஒரு பெரிய கட்டமைப்பை இருப்பதை காட்டுகிறது.

இந்த பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள இந்தியாவின் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம், இந்த 15,000 அடி உயர இமயமலை பகுதியிலே திங்களன்று நூற்றுக்கணக்கான வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில், இந்திய வீரர்கள் இரும்புக் கம்பிகளால், முட்கம்பிகளால் மூடப்பட்டிருந்த கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். பிற்பகல் தொடங்கிய இந்த மோதல் நள்ளிரவு வரை நீடித்துள்ளது.

லடாக்கில் நடந்த இந்த இந்தியா - சீனா வீரர்கள் மோதலில், ராணுவ வீரர்கள் ஒரு உயரமான பாறைகளில் இருந்து பனிக்கட்டிகளுக்குள் வீரர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர் என்பதை கால்வான் நதி செயற்கைக்கோள் வரைபடங்கள் விளக்குகிறது. 

Advertisement

தொடர்ந்து, சீன ஆம்புலன்ஸ்கள் அப்பகுதியில் இருந்து காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதை இந்திய வீரர்கள் கவனித்துள்ளனர். பின்னர் ஹெலிகாப்டர்கள் அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

இதேபகுதியில், 1962ல் இந்திய எல்லையை ஆக்கிரமித்தபோது, மோதல்கள் ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னர் கிட்டதட்ட 50 வருடங்களாக எந்தவொரு வன்முறை சம்பவமும் நிகழ்ந்தது இல்லை. சீன ராணுவ வீரர்கள் எல்லையை தாண்டியதும் இல்லை.

Advertisement

தவுலத் பெக் ஓல்டியில் இருந்து வடக்கு டார்பூக்குடன் தெற்கு நோக்கி இணையும் இந்தியாவின் புதிய சாலையை குறிவைத்து சீன ராணுவ வீரர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்று நம்பப்படுகிறது. 

லடாக் எல்லையில் உயிர் நீத்த 20 இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு. எங்களை யாரும் சீண்டினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் சக்தி எங்களுக்கு உண்டு' என்று கூறினார். 

Advertisement