This Article is From Jun 18, 2020

எல்லையில் இயல்பு நிலை திரும்ப இந்தியா, சீனா மேஜர் ஜெனரல்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!

1962 சீன இந்திய போருக்கு பின்னர் சீனா இந்திய எல்லையில் எவ்வித உரிமைக் கோரலையும் முன்வைக்கவில்லை. மேலும், எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடவில்லை. இந்நிலையில் தற்போது சீனா லடாக்கின் முழு கால்வான் பள்ளத்தாக்கையும் உரிமைக் கோருவதாக தகவல் வெளிவந்துள்ளன.

எல்லையில் இயல்பு நிலை திரும்ப இந்தியா, சீனா மேஜர் ஜெனரல்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!

இந்தியா-சீனா: உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (LOC) விதிகளை மாற்றவும் இராணுவம் முயல்கிறது

ஹைலைட்ஸ்

  • கால்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களிடையே மோதல்
  • இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
  • மேஜர் ஜெனரல் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
New Delhi:

லாடாகின் கிழக்கு பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததையடுத்து நிலைமையை சீராக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவ தரப்பிலிருந்து மேஜர் ஜெனரல் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

கிழக்கு லாடாகின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து சீன வீரர்கள் வெளியேறவில்லை என்கிற தகவல்கள் வந்துள்ளன.  1962 சீன இந்திய போருக்கு பின்னர் சீனா இந்திய எல்லையில் எவ்வித உரிமைக் கோரலையும் முன்வைக்கவில்லை. மேலும், எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடவில்லை. இந்நிலையில் தற்போது சீனா லடாக்கின் முழு கால்வான் பள்ளத்தாக்கையும் உரிமைக் கோருவதாக தகவல் வெளிவந்துள்ளன. சீனாவின் இந்த கோரிக்கையானது இந்தியாவும் சீனாவும் எதிரெதிர் முனையில் கொண்டு நிறுத்தியுள்ளது.

முன்னதாக சீனா ராணுவ வீரர்கள் திட்டமிட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன பிரதிநிதியான வாங்யிக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.