Read in English
This Article is From Jun 06, 2020

இந்தியா - சீனா எல்லை பிரச்னையை தூதரக, ராணுவ பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவு!

எல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் - மோல்டோவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா சார்பாக லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்பட 14 அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement
இந்தியா

லடாக்கில் எற்பட்டிருக்கும் எல்லை மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

New Delhi:

இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையை தூதரக ரீதியிலும், ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

லடாக்கில் இரு தரப்பும் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.. எல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் - மோல்டோவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா சார்பாக லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்பட 14 அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில் இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையை தூதரக ரீதியிலும், ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியா - சீனா இடையே 1962-ம் ஆண்டில் போர் நடைபெற்றது.  கடந்த 2017-ல் கிழக்கு இமாலய பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இரு  நாட்டு படைகளும் 3 மாதங்கள் முற்றுகையிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது லடாக் பகுதியில் மீண்டும் எல்லைப் பிரச்னை  வெடித்திருக்கிறது. லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

Advertisement

20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.

அதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.

Advertisement

இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

Advertisement