This Article is From Oct 02, 2019

மோடி - சீன அதிபர்கள் சந்திப்பதையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் வரும் 6-ம்தேதி முதல் ஆழ்கடல் மீன்பிடிக்க செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மோடி - சீன அதிபர்கள் சந்திப்பதையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

எல்லை பிரச்னை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

New Delhi:

இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பிரதமர் நரேந்திர மோடியை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவுள்ளார். இதுதொடர்பான தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றபோதிலும், இந்த சந்திப்பு 11-ம்தேதி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரு நாடுகளின் தலைவர்கள் வருவதால் மாமல்லபுரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, மத்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே, உள்துறை உயர் அதிகாரிகள், தமிழக தலைமை செயலர் சண்முகம் உள்ளிட்டோர் மாமல்லபுரத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். 

முன்னெச்சரிக்கையாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதி மீனவர்கள் வரும் 6-ம்தேதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாமல்லபுரம் நகரம் முழுவதும் குப்பைகளை அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள வியாபாரிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச அளவில் பிரச்னையை கிளப்பியது. அதற்கு சீனா ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மோடி - ஜிங்பிங் சந்திப்பின்போது இந்தியா - சீனா எல்லைப்பிரச்னை தொடர்பாகவும், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும் முக்கியமாக பேசப்படும். 
 

.