லடாக்கில் சீன இராணுவத்தின் ஊடுருவல்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- சீனா இந்தியாவின் நிலப்பகுதிகளை கைப்பற்ற முயன்று வருகிறது“: செனட்டர்
- நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். அவசியமெனில் அவர்களுக்கு உதவுவோம்
- குறைந்தபட்சம் 35 சீன வீரர்கள் உயிரிழந்திருக்கலாம்: அமெரிக்க உளவுத்துறை
Washington: சமீபத்தில் கிழக்கு லடாக் பகுதியில் நடந்த இந்திய சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி உட்பட 20 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 76 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவிற்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனா ஒரு முரட்டு நடிகர் என தெரிவித்திருந்தார். அதற்கும் முன்பாக, அமெரிக்க செனட்டர், “சீனா இந்தியாவின் நிலப்பகுதிகளை கைப்பற்ற முயன்று வருகிறது“ என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது, “இது மிகவும் கடினமான சூழ்நிலை. நாங்கள் இந்தியாவுடனும், சீனாவுடனும் பேசுகிறோம், அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய பிரச்சினை உள்ளது" என்று தனது தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலைமை குறித்து தனது மதிப்பீடு குறித்து கேட்டபோது,“இரு நாடுகளும் பலத்த சேதங்களை சந்தித்துள்ளன. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றோம். அவசியமெனில் அவர்களுக்கு உதவுவோம்.“ என டிரம்ப் கூறியுள்ளார்.
எல்லை பிரச்னையையொட்டி அமெரிக்கா, இந்தியாவுக்கு தொடர்ச்சியான தனது ஆதரவினை வழங்கிவருகிறது. சீன, எல்லையில் உயிரிழந்தவர்கள் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் சீனா வெளியிடாத நிலையில், சீன ராணுவத்திலிருந்து குறைந்தபட்சம் 35 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி, ஜனாதிபதி(டிரம்ப்) நிலைமையை அறிந்திருப்பதாகவும், கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையிலான நிலைமையை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
ஜூன் 2 ம் தேதி டிரம்ப் பிரதமர் மோடியுடனான தொலைபேசி அழைப்பின் போது, அவர்கள் இந்தோ-சீனா எல்லையில் நிலைமை குறித்து விவாதித்ததாக மெக்னானி கூறினார்.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக உள்நாட்டு போராட்டங்கள் மேலெழுந்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத் தவறியதாகவும், வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களாலும், கறுப்பினத்தவர் உயிரிழப்பு போன்ற பிரச்னைகளையும் மக்கள் எதிர்கொண்டு அதற்கெதிராக போராடிவருகிங்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.