சீன தூதரகத்தின் மீது 3 பேர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்
New Delhi: பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மத்திய அரசு கண்டித்துள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இங்கு சீன துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இதன் மீது இன்று காலை 3 பேர் கொண்ட கும்பல் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது.
இந்த சம்பவத்தில் 2 போலீசார் உயிரிழந்தனர். இந்த விவகாரம் சீனாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சீன தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சீன தூதரகம் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டபோதிலும் அங்குள்ள பணியாளர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.