New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 20 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி 20,06,760 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரேசில் 28 லட்சம் கொரோனா பாதிப்புகளோடு இரண்டாம் இடத்திலும், 50 லட்சம் பாதிப்புகளோடு அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19.65 லட்சமாக அதிகரித்திருந்தது.
இதுவரை 13.28 லட்சம் கொரோனா நோயாளிகள் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே போல 40,000க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.