This Article is From Jul 01, 2020

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது!!

இந்தியாவில் மொத்த தொற்றுநோயாளிகளில் 90 சதவிகிதத்தினர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய பத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது!!

இந்தியாவில் இதுவரை 6,00,032 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

New Delhi:

நாடு முழுவதும் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 6,00,032 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவைவிட தற்போது இந்தியா 50 ஆயிரம் நோயாளிகளை குறைவாக கொண்டுள்ளது. இந்தியா சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 14 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளை கொண்டு பிரேசில் இரண்டாவது இடத்திலும், 26 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கொண்டு அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளது.

.