எல்லைகோட்டு பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறுவதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் போர் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அதிகார்ப்பூர்வமாக அறிவித்தது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் f-16 ரக போர் விமானம் நொருங்கியது.
திரும்ப அடித்தது பாகிஸ்தான் என்ற தலைப்பில் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழப்புகள் இல்லாமல் பெரும் சேதம் இல்லாமல் பாகிஸ்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இது இந்திய தொடர்ந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி அல்ல என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேலும், எங்கள் உரிமையை நிலைநாட்டவும், சுய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை பெரிதுப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால், அந்த முன்னுதாரணத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டால் அவ்வாறு செய்யத் தயாராக இருக்கிறோம். அதனால்தான், தெளிவான எச்சரிக்கையுடன், பகல் நேரத்தில்தான் நடவடிக்கை எடுத்தோம் என்று பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில், உரிய ஆதாரமில்லாமல் தீவிரவாதிகளை தாக்குவதாக பாகிஸ்தான் மீது இந்திய தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், நாங்களும் பதில் தாக்குதல் நடத்தி எங்கள் உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள பதில் தாக்குதல் நடத்துவோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து பாதுகாப்பு மற்றும் வெளியுறவு செயலாளர்கள் உளவுத்துறை அதிகாரிகளுடன், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாகிஸ்தான் எல்லை பகுதியை நெருங்கி உள்ள ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் ராணுவ விமானங்குக்கு மட்டுமே அனுமதி என்றும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பயணிகள் விமானங்களுக்கு செல்வதற்கு முற்றிலும் தடைவிதிக்கப்ட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை சீனா சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியத் தரப்பு, பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. ஆனால், அதற்கு செவி மடுக்காமல் இருந்ததால் இந்தியா நடவடிக்கை எடுத்தாக வேண்டியிருந்தது.
எங்கள் ராணுவத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, இன்னும் அது போன்ற பல தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வருவதாக எங்களுத்துத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான் தீவிரவாத முகாம்களை மட்டும் அழிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தோம் என்று தெரிவித்தார்.