Read in English
This Article is From Nov 07, 2018

ஈரான் விஷயத்தில் இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு தரும் ட்ரம்ப் சர்கார்!

இந்த முடிவு ட்ரம்ப் அரசாங்கத்தால் எடுக்கப்பட காரணம் '' தடைகள் கடுமையானவை தான் ஆனால் வளைகுடா நாடுகளின் வளர்ச்சி மற்றும் ஆப்கான் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Advertisement
News

மிக நீண்ட விவாதங்களுக்கு பிறகு சபஹார் துறைமுக விஷயத்தில் ரயில்வே மற்றும் ஏற்றுமதி விஷயங்களில் தடையில்லா அனுமதியை வழங்க அரசு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Washington:

ஈரானில் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அறிவித்தது. அதில் இந்தியா பங்கு கொண்டுள்ள சபஹார் துறைமுக திட்டங்கள் சிலவற்றுக்கு விலக்களித்துள்ளது. அதோடு ஆப்கானிஸ்தானுக்கு போடப்படவுள்ள ரயில்வே திட்டத்துக்கும் விலக்களித்துள்ளது.

இந்த முடிவு ட்ரம்ப் அரசாங்கத்தால் எடுக்கப்பட காரணம் '' தடைகள் கடுமையானவை தான் ஆனால் வளைகுடா நாடுகளின் வளர்ச்சி மற்றும் ஆப்கான் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

மிக நீண்ட விவாதங்களுக்கு பிறகு சபஹார் துறைமுக விஷயத்தில் ரயில்வே மற்றும் ஏற்றுமதி விஷயங்களில் தடையில்லா அனுமதியை வழங்க அரசு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதுமட்டுமில்லாமல் இந்தியா, சீனா, இத்தாலி, ஜப்பாஅன், க்ரீஸ், தென்கொரியா, தாய்வான் ம்,அற்ரும் துருக்கி எந்தவித தடையுமின்றி ஈரானிடமிருந்து எண்ணெயை வாங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு ஆப்கானின் பொருளாதார வளர்ச்சியில் உள்ள அக்கறையும், மனிதநேயமுமே காரணம் என்று கூறியுள்ளது. இதில் இந்தியா தொடர்பு கொண்டுள்ளதால் இந்த விலக்கை அளித்துள்ளதாக ட்ரம்ப் அரசு தெரிவித்துள்ளது. 

ஆப்கான் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகம் என்பதால் அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவை சீண்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
Advertisement