বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Mar 13, 2019

இந்தியாவும் ’போயிங் 737 மேக்ஸ்-8’ரக விமானத்திற்கு தடை விதித்தது!

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை (DGCA) நாட்டில் செயல்படும் விபத்துக்குள்ளான வகை விமானங்களுக்கு கூடுதல் பராமரிப்பு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டது. எனினும் தடை உத்தரவு பிறப்பிக்காமல் இருந்தது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • பயணிகள் பாதுகாப்பிற்கே முதல் முக்கியத்துவம்: விமான போக்குவரத்து அமைச்சகம்
  • மற்ற நாடுகள் தரையிரக்கியதை தொடர்ந்து, இந்தியாவும் தரையிரக்க உத்தரவிட்டுள்
  • ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் மற்றுமே இந்த ரக விமானத்தை கொண்டுள்ளது.
New Delhi:

எத்தியோப்பியாவில் 'போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானம் விபத்துக்குள்ளான நிலையில், 'போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்களை உடனடியாக தரையிறக்க இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை முடிவு செய்துள்ளது.

பயிணிகளின் பாதுகாப்பை கருதி விபத்துக்குள்ளான வகை விமானங்கள் தரையிரக்கப்பட்டு அவற்றுக்கு கூடுதல் பராமரிப்பு பரிசோதனை மேற்கொள்ள விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் அதன் டிவிட்டர் பதிவில் கூறியதாவது, ஏப்போதும் பயணிகள் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக உலகம் முழுவதும் உள்ள விமானங்கள் மற்றும் விமான உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளவோம் என்று தெரிவித்துள்ளது.

‘போயிங் 737 மேக்ஸ் 8' விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தியாவும் ‘போயிங் 737 மேக்ஸ் 8' விமானங்களை தரையிரக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement

‘போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8' விமானம், நேற்று முன்தினம் காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர்.

Advertisement

இந்த விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது. எனவே, ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது. அதன்படி விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானத்தை இயக்கும் விமானிக்கு குறைந்தது '1,000 மணி நேரம்' அனுபவம் வேண்டும் என்றும் துணை விமானிக்கு '500 மணி நேரம்' அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ் மற்றம் குறைந்த விலை விமான சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தை பயன்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் என்டிடிவியிடம் கூறும்போது, ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரகத்தை சேர்ந்த 13 விமானங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளதாகவும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 5 விமானங்களை கொண்டுள்ளதாகவும் எதுவும் தற்போது இயக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்தஅதிகாரி ஒருவர் கூறும்போது, ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவமனமானது 225 ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் சில விமானங்கள் டெலிவரி பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 205 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

Advertisement

இந்த விபத்து குறித்து போயிங் நிறுவனம் கூறும்போது, எத்தியோப்பியா விமான விபத்து குறித்து விசாரணையை துவங்கி உள்ளதாகவும், தொடக்க நிலையில் விசாரணைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானிகளுக்கு எந்த புதிய வழிகாட்டுதல்களை வழங்கவும் அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானம் புதிய மாடலாகும், இது 1967 முதல் இயங்கி வருகிறது என்றும் 2017 வரை 5000 விமானங்களுக்கு ஆர்டர் பெறப்பட்டுள்ளதாகவும், இதுவரை 350 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Advertisement