This Article is From Feb 26, 2019

‘ஜெய்ஷ் அமைப்பின் முக்கியப் புள்ளிகள் கொல்லப்பட்டனர்!’- இந்திய அரசு திட்டவிட்டம்

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

‘ஜெய்ஷ் அமைப்பின் முக்கியப் புள்ளிகள் கொல்லப்பட்டனர்!’- இந்திய அரசு திட்டவிட்டம்

இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

New Delhi:

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிரடி சம்பவத்தை இந்திய ராணுவம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. 

இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. அந்த அமைப்பு முகாம்கள் மீதும், லஷ்கர்-இ-தய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகள் முகாம்கள் மீதும் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே, 'ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, மேலும் பல தற்கொலைப் படைத் தாக்குதலை நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்த  உள்ளதாக எங்களுக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்தன. இந்த காரியத்துக்காக பலருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்துதான், அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று நடத்தப்பட்ட தாக்குதலால் பாலகோட்டில் ஜெய்ஷ் அமைப்பின் மிகப் பெரிய முகாமை இந்திய தரப்பு அழித்துள்ளது.

இன்று அதிகாலை இந்திய தரப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஷ் அமைப்பின் முகாம்கள், கமாண்டோக்கள், பயிற்சியாளர்கள், ஜிஹாதிக்கள் என பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதத்தை முழுவதுமாக அழிக்க இந்தியா உறுதியாக செயல்படும். இந்த அதிரடி தாக்குதலானது ஜெய்ஷ் அமைப்பை குறிவைத்துத்தான் செய்யப்பட்டது. பொது மக்கள் இறந்துவிடக் கூடாது என்பதை கணக்கில் கொண்டுதான் இந்தத் தாக்குதலை நடத்தினோம்' என்றார்.

 

மேலும் படிக்க - "புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி: இந்திய விமானப்படை அதிரடி!"

.