Read in English
This Article is From Jul 10, 2020

லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் மீண்டும் ரோந்து பணியைத் தொடங்க இருக்கும் இந்தியா!!

இந்த நேரத்தில், கால்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவில் சீன மற்றும் இந்தியப் படைகள் தலா 2 கிலோமீட்டர் தூரத்தை திரும்பப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

லடாக்கில் எட்டு மலை தொடர்களிலும் (விரல்கள் என குறிப்பிடப்படுகிறது) ரோந்து செல்வதற்கான உரிமையை இந்தியா பாரம்பரியமாக கோரியுள்ளது.

New Delhi:

சமீபத்தில் லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் சீன ராணுவம் 2 கி.மீ பின்வாங்கியது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய பகுதியான ஃபிங்கர்ஸ் பிராந்தியத்தியமான மலைத் தொடர்களில் இந்தியா மீண்டும் தனது ரோந்துப் பணியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ரோந்துப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் பதட்டமான நிலைமை தொடர்ந்து சீரடைந்து வருவதால் மீண்டும் நம்முடைய எல்லை புள்ளிகளை நாம் கண்காணிப்போம்.” என அரசு தரப்பு வட்டாரங்கள் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா: பாங்காங் ஏரி முகம் சுடும் தளம்.  Click here for a high resolution image

எல்லை சிக்கல் என்பது நம்முடைய தேசிய வரைபடத்தினை எடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோடுகளுக்குள் உள்ள பகுதிகள் அனைத்தும் நம்முடையது என கூறுவது போல அல்லாமல், நடைமுறையில் பல சிக்கல்களை கொண்டுள்ளது. உதாரணமாக விரல் 8(விரல் என்பது மலை தொடரின் பெயராகும்) வரை இந்தியா தனது நிலமாக கருதுகிறது. ஆனால், சீனா இந்த எல்லையை விரல் 4 வரையே வகுத்துள்ளது. சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் எட்டு விரல்களையும்ரோந்து செல்வதற்கான உரிமைகளை இந்தியா பாரம்பரியமாகக் கோரியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மோதல் விரல் எட்டு பகுதியில் நடைபெற்றது.

'விரல் 4' மற்றும் 'விரல் 6' க்கு இடையில் குறைந்தது 186 சீன குடிசைகள், தங்குமிடங்கள் மற்றும் கூடாரங்கள் தெரிந்தன. Click here for a high resolution image

தற்போதைய பேச்சுவார்த்தையின் காரணமாக சீன படைகள் விரல் 4 மற்றும் 8க்கு இடையே தன்னுடைய ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பதட்டமான காலப்பகுதியில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் 186 க்கும் மேற்பட்ட சீன கூடாரங்களும் தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் குறிப்பிடுகின்றன. இதுவரை, ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8 க்கு இடையில் உள்ள ரிட்ஜ்-கோடுகளை அவர்கள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ள போதிலும், ஃபிங்கர் 4 பிராந்தியத்தில் சீன ஆக்கிரமிப்பு குறைந்து வருகின்றது.

இந்த நேரத்தில், கால்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவில் சீன மற்றும் இந்தியப் படைகள் தலா 2 கிலோமீட்டர் தூரத்தை திரும்பப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement