This Article is From Aug 15, 2018

"நாட்டு வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியமானது" - பிரதமர் மோடி உரை

காலை 7.15 மணிக்கு செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற்க் கொண்டார்

New Delhi:

06:37 (IST) செங்கோட்டையில் நடைப்பெற்று வரும் 72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

07:33 (IST) காலை 7.15 மணிக்கு செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 7.30 மணியளவில் மூவர்ண தேசியை கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.

07:40 (IST) "இன்று, நம் நாட்டின் 72வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு இந்திய குடிமகனும் உலகின் 6வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவை எண்ணி பெருமை கொள்கிறார்.”

07:45 (IST) "நாட்டின் பல்வேறு பகுதிகளில், கனமான பருவ மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பில் குடும்பங்களை இழந்த மக்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்".

07:50 (IST) "பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறையினர், பாராளுமன்ற பணியாளர்கள் ஆகியோரின் சேவைக்கு மரியாதை செலுத்துகிறேன். அன்பானவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு, என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்".

07:50 (IST) "இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர், அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் இந்திய நாட்டில், அனைவருக்கும் சம உரிமை கிடைக்க நாம் வழிவகுக்க வேண்டும்".

07:52 (IST) “2019ல், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த துயர சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்”.

08:03 (IST) ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மோடி "முதலில், ஜிஎஸ்டி சில பிரச்சனைகளை சந்தித்தாலும், பின்னர் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது".

08:14 (IST) "இந்திய விஞ்ஞானிகள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். 100 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்தனர். புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்” என்றார்.

08:16 (IST) "2022 ஆம் ஆண்டிற்குள், மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி, இந்தியர்கள் விண்வெளி செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது”.

08:24 (IST) "உஜ்வாலா யோஜ்னா இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் மூலம், "மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

08:30 (IST) “ஆயூஷ்மான் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பல லட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர்”.

08:34 (IST) “நாட்டில் உள்ள ஊழல் குறைந்துள்ளது, கருப்புப் பணம் முடக்கப்பட்டுள்ளது. அரசுக்கு அளிக்க வேண்டிய வரியை சரிவர செலுத்தும் ஓவ்வொரு இந்தியனின் பங்களிப்பில் தான், இந்த நலத்திட்டங்கள் செயல் பெற்று வருகின்றன”.

08:47 (IST) “கிராமத்தில் இருந்து பாராளுமன்றம் வரை இந்தியப் பெண்கள் முன்னேறி வந்துள்ளனர். தற்போதைய அமைச்சரவையில், அதிக அளவிலான பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த முன்னேற்றங்களுக்கு தடையாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடைப்பெற்று வருகின்றன."

08:57:23 (IST) "இந்திய நாட்டின் முன்னேற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!" என்று கூறி உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி.

.