Read in English
This Article is From Dec 03, 2018

‘இந்தியா என் தந்தை நாடு!’- யோகிக்கு பதிலடி கொடுத்த ஒவைசி

Telangana Election 2018: தெலங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் 7 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது

Advertisement
இந்தியா Posted by (with inputs from Agencies)

Highlights

  • 2014-ல், ஒவைசியின் கட்சி 7 இடங்களில் வென்றது
  • ஒவைசி தெலங்கானாவை விட்டு ஓட வேண்டியிருக்கும், யோகி
  • வரலாற்றைத் திரிக்கிறார் யோகி, ஒவைசி
Hyderabad/New Delhi:

தெலங்கானா மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், ஒவைசி நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்' என்று பேசினார். அதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி.

தெலங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் 7 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியில் இருக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, மீண்டும் அரியணையைப் பிடிக்க மும்முரமாக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தெரச கட்சியை வீழ்த்த காரசாரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்னர் தெலங்கானாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத், ‘பாஜக மட்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், ஒவைசி தெலங்கானாவிலிருந்து ஓட வேண்டிய நிலை வரும். எப்படி நிஜாம் ஐதராபாத்திலிருந்து துரத்தப்பட்டாரோ, அதே போல ஒவைசியும் துரத்தப்படுவார்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு ஒவைசி, ‘இந்தியா என்னுடைய தந்தையின் தேசம். என்னை யாரும் துரத்த முடியாது. யோகி ஆதித்யநாத், வரலாறை எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறலாம். ஆனால் ஐதராபாத் நிஜாம், நகரத்தை விட்டு ஓடவில்லை. அவருக்கு, ‘ராஜ் பிரமுக்' என்று பட்டம் வழங்கப்பட்டது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த போரில், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் நிஜாம்.

Advertisement

அச்சுறுத்தலுக்கும், துவேஷப் பேச்சுகளுக்கும் பயப்படும் ஆள் நான் கிடையாது. யோகி ஆதித்யநாத் பேசியது தான், பிரதமர் மோடியின் எண்ணமும் ஆகும். உத்தர பிரதேச முதல்வர் யோகி, முதலில் அவரது தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அங்குதான் 150 குழந்தைகள் பரிதாபதாக இறந்தனர். தன் பதவியின் பொறுப்பை உணர்ந்து, ஆதித்யநாத் மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று பேசியுள்ளார்.

Advertisement