Read in English
This Article is From Oct 29, 2018

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று - ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

ஜப்பானுக்கு சனிக்கிழமை வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா - ஜப்பான் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்

Advertisement
இந்தியா

ஜப்பானில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பேசும் பிரதமர் மோடி

Tokyo:

ஜப்பானில் நடைபெற்று வரும் இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது-

ஜப்பானில் உள்ள இந்தியர்கள் புதிய இந்தியாவை படைக்க வருமாறு அழைப்பு விடுக்கிறேன். மனித சமூகத்திற்கு இந்தியா ஆற்றும் சேவைகளை சர்வதேச நாடுகள் பாராட்டி வருகின்றன. மக்கள் நலனை பேணி வருவதற்காகவும், சிறந்த கொள்கைகளை கொண்டிருப்பதற்காகவும் மத்திய அரசை உலக நாடுகள் பாராட்டுகின்றன.

டிஜிட்டல் துறையில் இந்தியா வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஏராளமான கிராமங்களை இணைய வசதி இன்று இணைத்துள்ளது. சுமார் 100 கோடிக்கும் அதிகமான செல்ஃபோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒரு பாட்டில் தண்ணீரை விட ஒரு ஜி.பி. டேட்டாவின் விலை குறைந்து விட்டது. அனைத்து சேவைகளுக்கு டேட்டா இப்போது கருவியாக மாறியிருக்கிறது. இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் நாங்கள் தரமான பொருட்களை தயாரித்து அளித்து வருகிறோம்.

Advertisement

உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எங்கு இருந்தாலும் அங்கு ஒளியை பரப்புமாறு இந்திய சமூகத்தை நான் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement