துறை முகம் மற்றும் கடல் பகுதி என மொத்தம் 8 நாட்களுக்கு பயிற்சி நடைபெறுகிறது.
Visakhapatnam: இநதியா மற்றும் ஜப்பான் கடற்படைகளுக்கு இடையிலான போர்ப்பயிற்சி விசாரகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பானின் அதிநவீன போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் கப்பல்கள் உள்ளிட்டவை விசாகப்பட்டினத்திற்கு வந்துள்ளன.
இந்த கூட்டுப் பயிற்சி JIMEX என்று அழைக்கப்படும். அந்த வகையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் 18-வது போர்ப்பயிற்சி இதுவாகும். இந்தியாவை பொறுத்தவரையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை இந்த பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.
இதில் ஐ.என்.எஸ். சாத்புரா உளவு பார்ப்பதிலும், போர் புரிவதிலும் வலிமை மிக்கது. ஐ.என்.எஸ். கட்மாட்டில் நீர் மூழ்கி கப்பல்களை தாக்கும் சக்தி கொண்டது. ஐ.என்.எஸ். சக்தி போர்க்கப்பல் ஏவுகணைகளை தடுக்கும் திறன் உடையது.
மொத்தம் 9 நாட்களுக்கு இந்த போர்ப்பயிற்சி நடைபெறுகிறது. துவக்க விழா இன்று நடைபெற்றது. இதன் பின்னர் துறைமுகத்தில் 4 நாட்கள், கடலுக்குள் 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் போர்ப் பயிற்சி நடைபெறும். முன்னதாக கடந்த 2013 டிசம்பரில் சென்னை அருகே இந்தியா – ஜப்பான் கடற்படையின் போர்ப் பயிற்சி நடைபெற்றது.