This Article is From May 18, 2020

கொரோனா தொற்று குறித்த சுயாதீன விசாரணைக்கு 61 நாடுகளுடன் இணையும் இந்தியா!!

கடந்த மாதம், கொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்த முதல் நாடு ஆஸ்திரேலியா.

இந்தியாவைத் தவிர, இங்கிலாந்து, ஜப்பான், தென் கொரியா மற்றும் கனடா ஆகியவை இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன.

Geneva, Switzerland:

73 வது உலக சுகாதார சபை (WHA) கூட்டத்தில் முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தின்படி, கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO)  அளித்த பதில் குறித்து சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கு இந்தியா உட்பட 62 நாடுகள்  ஆதரவளித்துள்ளன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் தொடர்பான அவற்றின் காலக்கெடு குறித்த விசாரணையை தவிர, பாரபட்சமில்லாத, சுதந்திரமான விசாரணை நடத்த ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள வரைவுகள் வழிவகுக்கின்றன.

கடந்த மாதம், கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்த முதல் நாடு ஆஸ்திரேலியாவாகும். அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன், கொரோனா தொற்று பரவலின் வெடிப்பு குறித்த விசாரணைக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த விசாரணையானது, இனி வரக்கூடிய காலக்கட்டங்களில் இது போன்ற தொற்றுகளிலிருந்து சர்வதேச சமூகத்தினை பாதுகாக்க உதவும் என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விசாரணைக்கு ஜப்பான், ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, தென் கொரியா, பிரேசில் மற்றும் கனடா ஆகிய நாடுகளும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்று பரவல் விஷயத்தில் சீனா பல தகவல்களை மூடி மறைத்துவிட்டது என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டி வந்த நிலையில், ஆஸ்திரேலியா இதற்கான சுதந்திரமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பானது சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்கா, அமைப்புக்கான நிதியை வெட்டியது. மேலும், தங்கள் நாட்டின் மருத்துவ ஆய்வுக் குழுவினை சீனா அனுமதிக்க வேண்டும் என்றும், ஒரு வேளை வேண்டுமென்றே சீனா வைரஸை பரப்பியிருந்தார்கள் எனில் அவர்கள் அதற்கான விளைவினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.