This Article is From Jun 01, 2019

கேரளாவில் 6-ம்தேதி பருவமழை தொடங்குகிறது!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

நடப்பாண்டில் பருவமழை சராசரி அளவிலேயே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கேரளாவில் 6-ம்தேதி பருவமழை தொடங்குகிறது!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

டெல்லியில் 46 டிகிரி அளவுக்கு வெயில் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

தென்னிந்தியாவில் பருவமழை ஜூன் 6-ம்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'தென்னிந்தியாவின் அரபிக் கடல், தென்மேற்கு தென் கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதி, அந்தமான், அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய இடங்களில் மழை பெய்யும். அடுத்த 2-3 நாட்களில் அரபிக்கடலின் பெரும்பான்மை பகுதிகளில் மழை பெய்யக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சராசரியாக பெய்யும் மழையில் 96 சதவீதத்தை இந்த பருவமழையில் எதிர்பார்க்கலாம். ஜூன் மாதத்தில் தொடங்கும் பருவமழை அடுத்த 4 மாதங்களில் சராசரியாக 89 சென்டி மீட்டர் அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பெய்யும் மொத்த மழையில் 70 சதவீதம் பருவமழையில்தான் கிடைக்கிறது. தென்னிந்தியாவின் கடல் பகுதயில் அடுத்த 3-5 நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

டெல்லியை பொறுத்தளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அங்கு 46 டிகிரி அளவுக்கு வெயில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

.