This Article is From Jun 26, 2018

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா - அதிர்ச்சி ரிப்போர்ட்

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, பெண்கள் வாழ் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா - அதிர்ச்சி ரிப்போர்ட்
London:

லண்டன்: சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, பெண்கள் வாழ் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேசனால், பெண்களுக்கான பிரச்சனை குறித்து ஆய்வு செய்யும் 550 வல்லுநர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடந்தது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன இதற்கு அடுத்தப்படியாக சோமாலியா மற்றும் சவூதி அரேபியா இருக்கின்றன.

முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே மேற்கத்திய நாடு அமெரிக்கா. அமெரிக்கா மூன்றாம் இடத்தை சிரியாவுடன் இணைந்து அமெரிக்கா பெற்றுள்ளது. பாலியல் வன்முறை, துன்புறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த நாட்டில் அதிகம் நடக்கிறது என்ற கருத்துக்கேட்புக்கு வல்லுனர்கள் பதிலளித்தனர்.

ஆப்கானிஸ்தான், காங்கோ, பாக்கிஸ்தான், இந்தியா மற்றும் சோமாலியா ஆகியவை பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக இருப்பதாக நிபுணர்கள் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு கூறியது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்கு, பிறகும், பெண்கள் சமாளிக்க முடியாத ஆபத்தை எதிர்நோக்குவதில் இந்தியா முதன்மை இடத்திற்கு வந்துக் கொண்டிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

2007 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் நான்கு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் எந்த நாடுகளில், பெண்களுக்கு ஆபத்தான நாடு , எந்த நாடு சுகாதாரம், பொருளாதார வளங்கள், பாலியல் வன்முறை முதலியவற்றில் மோசமாக இருக்கிறது என்பதைப் பற்றி கருத்து கேட்க்கப்பட்டது..

இந்தியாவின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

போரில் சிக்கிய நாடுகள்:

சுகாதாரம் குறித்த 7 கேள்விகளில், 4 கேள்விகளுக்கு ஆஃப்கானிஸ்தான் மிக மோசமான மதிப்பீடுகளை பெற்றிருந்தது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலின வன்முறைக்கும், கல்வியறிவு, வறுமை மற்றும் பிற மனித உரிமைகள் குற்றங்களை எதிர்கொண்டுள்ளதாக ஆப்கானிய பெண்களின் முன்னேற்றத்தின் இயக்குனர் கிம்பர்லி ஓடிஸ் கூறினார்.

“ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரும் மோதல்களும் மோசமாகி வருகின்றன. இது பெண்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கிறது, "என்று கணக்கெடுப்பில் பங்கு பெற்ற ஓடிஸ் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானின் பொது சுகாதார அமைச்சர் ஃபெரோஸூடின் ஃபெரோஸ், 17 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் தாலிபான் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் பெரும்பகுதிகளால் பெண்களுக்கு வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்று கூறுகிறார்.

இப்போதெல்லாம், தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் ஆயுத மோதல் ஆப்கானிஸ்தானில் இறப்பு மற்றும் இயலாமைக்கு மூன்றாவது (மிக உயர்ந்த) காரணமாக உள்ளது, "என அவர் லண்டனில் ஒரு பேட்டியில் தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷனுக்குத் தெரிவித்தார்.

ஏழு ஆண்டுகால யுத்தத்தின் தாக்கத்தால் சிரியா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது என கணக்கெடுப்பு கூறுகிறது , சுகாதாரம், பாலியல் மற்றும் பாலியல் அல்லாத வன்முறைகள் கவலையை கொடுக்கிறது.

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நிறைய ஆபத்துகள் உள்ளன, "என்று சிரியாவில் பெண்கள் மையங்களுக்கு ஆதரவளிக்கும் பெண்கள் மேம்பாட்டுக்கான நிர்வாக இயக்குனர், மரியா அல் அப்தே கூறுகிறார்.

அரசு படைகளால் பாலியல் வன்முறைகள் நடக்கிறது. வீட்டில் நடக்கும் வன்முறை மற்றும் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதோடு மேலும் பெண்கள் பிரசவத்தில் இறக்கும் நிலையும் இருக்கிறது.

இரண்டு தசாப்தங்களாக யுத்தம் நடக்கும் சோமாலியாவில், வன்முறை கலாச்சாரம் அரசு இயந்திரத்தை வலு இழக்கச் செய்துள்ளது. இதனால் பெண்களுக்கு மிக ஆபத்தான ஐந்து நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

சவூதி அரேபியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது, பெண்கள் உரிமைக்கான வல்லுனர்கள் சமீப ஆண்டுகளில் சில சவுதியில் முன்னேற்றங்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர், ஆனால் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு மீதான தடையை நீக்குவதற்கு முன்னர் பெண் செயற்பாட்டாளர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டதால் இங்கு முன்னேற்றம் மிகவும் தேவை என்பதைக் காட்டுவதாகவும் கூறுகின்றனர்.

# MeToo பிரச்சாரம்

பெண்களுக்கு 10 வது மிக ஆபத்தான நாடுகளில் அமெரிக்கா இருப்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக் இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிராக #MeToo மற்றும் times up பிரச்சாரங்கள் அமெரிக்காவில் மிகுந்த கவனம் பெற்றிருந்தன, குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், காங்கோ, ஏமன் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் பெண்களுக்கு முதல் 10 ஆபத்தான நாடுகளில் உள்ளது.

இந்தியா, லிபியா மற்றும் மியான்மர் ஆகியவை உலகின் பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளாக கருதப்படுகின்றன,

.