தீவிரவாதத்தை தூண்டி வருவதாக பாகிஸ்தான் மீது மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
Amritsar: தீவிரவாதத்தை நிறுத்திக் கொள்ளாவிட்டால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பஞ்சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது-
இந்திய நதிகள் மூலம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதனை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. 1960-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, இருதரப்புக்கும் இடையே எந்த வித பிரச்னையும் இல்லாமல் தண்ணீர் பகிரிந்தளிக்கப்படுகிறது.
தீவிரவாதத்தை தூண்டும் போக்கை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் தருவதை நிறுத்தி விடுவோம். அரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்காக பஞ்சாபில் 6 அணைகளை கட்ட திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு கட்கரி பேசினார்.