தமிழ்நாட்டில் 4 பொறியியல் கல்லூரிகள் மூடுப்படலாம் என தகவல்
New Delhi: இந்திய அளவில் நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இதன்படி சம்பந்தப்பட்ட 75 கல்லூரிகளில் ஆள்சேர்க்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விருமபி தேர்வு செய்யாததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் வருகின்றன. இந்த தகவலை AICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்டிப உத்தரப்பிரதேசத்தில் 31, பஞ்சாப் 6, சட்டீஸ்கர் 5, அரியானா 5, உத்தரகாண்ட் 4, தமிழ்நாடு, 4, மத்திய பிரதசம் 4, குஜராத் 4, ராஜஸ்தான் 2, தெலங்கானா 2, ஒடிசா 2, மத்திய பிரதேசம் 2 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது.
ஏ.ஐ.சி.டி.இ. தகவலின்படி மொத்தம் 264 பொறியியல் கல்லூரிகள் அனுமதி இன்றி தொடங்கப்பட்டுள்ளன.