இது ஒரு சந்திப்பு மட்டுமே. பேச்சுவார்த்தை இல்லையென்று மத்திய அரசு கூறியுள்ளது.
New Delhi: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (New York) அடுத்தவாரம் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறும் என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “இது ஒரு சந்திப்பு மட்டுமே. பேச்சுவார்த்தை அல்ல” என்று கூறினார்.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் இருதரப்பு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ரவீஷ் குமார் அளித்த விளக்கத்தில், பாகிஸ்தானுடன் சந்திப்பு நடத்த மட்டுமே முடிவு செய்திருக்கிறோம். எதுகுறித்து பேசுவது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும் தேதியை ஐ.நா.வில் உள்ள இரு நாட்டின் நிரந்தர பிரதிநிதிகள் முடிவு செய்வார்கள் என்றார்.