This Article is From Feb 04, 2020

இந்தியாவின் பாமாயில் இறக்குமதி தடை "தற்காலிகமானது" - மலேசிய அரசு

"நீண்டகாலமாக இரு நாடுகளும் நல்ல உறவுகளைக் கொண்டிருப்பதால், இரு நாடுகளும் தற்போதைய சவால்களை சமாளிக்கும்"

இந்தியாவின் பாமாயில் இறக்குமதி தடை

கடந்த மாதம், இந்திய அரசு மலேசியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதியைத் தடை செய்தது.

ஹைலைட்ஸ்

  • மலேசிய பாமாயிலுக்கு இந்தியா முடக்குப் போட்டது.
  • மலேசிய பாமாயில் வாங்குவதைத் தவிர்க்குமாறும் மத்திய அரசு கேட்டது
  • சிஏஏ, மற்றும் 370 விஷயங்களில் இந்தியாவை விமர்சித்தது மலேசியா
KUALA LUMPUR:

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அரசு மலேசிய அரசிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாமாயிலுக்கு புதிய தடை விதித்தது. இந்நிலையில் பாமாயில் கொள்முதலைக் குறைப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கை "தற்காலிகமானது" என்றும், இந்த பிரச்சனை இரு நாடுகளுக்கிடையில் இணக்கமாக பேசி தீர்க்கப்படும் என்றும் மலேசியா அரசு கூறியுள்ளது.

கடந்த மாதம், இந்திய அரசு மலேசியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதியைத் தடை செய்தது.

காஷ்மீர் நடவடிக்கை மற்றம் குடியுரிமைச் சட்டத்தைப் பற்றிய விமர்சனம் ஆகிய விஷயங்களுக்கு பிறகு மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்திய இறக்குமதியாளர்களைக் கேட்டுக்கொண்டது மத்திய அரசு.

"நீண்ட காலமாக இரு நாடுகளும் நல்ல உறவுகளைக் கொண்டிருப்பதால், இரு நாடுகளும் தற்போதைய சவால்களை சமாளிக்கும். மேலும், பரஸ்பர மற்றும் நன்மை பயக்கும் விளைவுகளை நோக்கி பயணிக்கும்" என்றும் மலேசிய பாமாயில் கவுன்சில் அறிக்கையில் குறிபிட்டுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.