This Article is From Sep 22, 2018

இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு தேர்வான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’

28 படங்கள் போட்டியிட்ட நிலையில், இறுதியாக ரிமா தாஸின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு தேர்வான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’

'வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படத்தின் யூ-ட்யூப் ட்ரெய்லர் காட்சி

New Delhi:

2019-ம் ஆண்டு ஆஸ்கர் தேர்வுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் திரைப்படங்களுக்கு 28 படங்கள் போட்டியிட்ட நிலையில், இறுதியாக ரிமா தாஸின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பிறமொழிப் படங்கள் பிரிவுக்குத் தேர்வு செய்வதற்காக மும்பையில் பல்வேறு திரைப்படங்கள் நேற்று திரையிடப்பட்டன. அதில், ரிமா தாஸ் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அசாமில் உள்ள கிராமத்தில் இருக்கும் சிறுமி தனது ஏழ்மையிலும் எலக்ட்ரிக் கிட்டார் வாங்க வேண்டும் என்ற கனவினை எட்டிய கதையை மிகவும் எளிமையாக கூறியிருப்பார். இந்த படம் அனைவரையும் கவர்ந்திருந்ததோடு கடந்த ஆண்டுக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று காலை பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்படும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ராஸி, பத்மாவத் ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா, குலாப்ஜாம், பிஹு, கட்வி ஹவா, போகாடா, ரேவா, அஜ்ஜி, நாட் உள்ளிட்ட 28 திரைப்படங்களில் இருந்து, ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு செய்து ஆஸ்கருக்கு அனுப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

.