ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டிரம்புடன் உரையாற்றினார்.
ஹைலைட்ஸ்
- மூன்றாவது நபர் மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு
- மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
- அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நிகழ உள்ளது.
New Delhi: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மூன்றாவது முறையாக தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் மூன்றாவது நபர் மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊடகங்கள் நாளை வரை காத்திருக்க வேண்டும் என நாளை மோடியும், டிரம்பும் சந்திக்க உள்ளதை சுட்டிக்காட்டி வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் நேற்று முன்தினம் ஒரே மேடையில் உரையாற்றிய டிரம்ப், "தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இருந்து உலகத்தை விடுவிக்க அமெரிக்க துணை இருக்கும் என்று தெரிவித்த நிலையில், நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த அவர் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதால், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
‘பாகிஸ்தானை நம்புகிறேன்'. நான் இம்ரான் மற்றும் மோடிக்கு நல்ல நண்பனாக இருப்பதால் என்னால் இதைச் செய்ய முடியும். காஷ்மீரில் எல்லாம் சரியாக நடப்பதை நான் காண விரும்புகிறேன். அங்கு அனைவரும் சரியாக நடத்தப்பட வேண்டும் என்னால் மத்தியஸ்தம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளேன் என்றார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்கத்தின் மேற்கு பிராந்திய செயலர் கிதேஷ் சராமா கூறுகையில், மத்தியஸ்தம் தொடர்பாக கேள்வியை எழுப்பும் டிரம்ப், பின்னர் அதில் இருந்து பின்வாங்கி செல்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நிகழ உள்ளது. அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள் என்று கூறினார்.
மத்திய அரசு கடந்த ஆக.5-ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பரிவு 370-ஐ நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இது அனைவருக்கும் தெரியும். இதனையே கடந்த காலங்களிலும் கூறியுள்ளோம். சற்று பொறுத்திருங்கள் என்பது எனது வேண்டுகோள் என கூறினார்.
முன்னதாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒட்டுமொத்த இந்தியாவும், அதிபர் ட்ரம்புடன் நன்கு தொடர்பு கொண்டுவிட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளதால், அவர் வேட்பாளராக மீண்டும் நிற்கிறார். எனவே, அவரை மீண்டும் அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
அமெரிக்காவில் 9/11 தாக்குதல், மும்பையில் 26/11 தாக்குதல் நடத்தியவர்களை தற்போது எங்கே தேடுவது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளை உருவாக்குபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.