This Article is From Jun 21, 2018

இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தியது

இம்முடிவு ஐரோப்பிய யூனியன் வரி அதிகரிப்பை அறிவித்தப்பிறகு முடிவுசெய்யப்பட்டது.

இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தியது

India increased duties on slew of farm products, steel and iron imported from US. (Reuters)

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி உயர்வு
  • இம்முடிவு ஐரோப்பிய யூனியன் வரி அதிகரிப்பை அறிவித்தப்பிறகு முடிவு
  • இந்த நடவடிக்கை உலக அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய அதிர்வை ஏற்படுத்தும்
New Delhi: இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் இரும்பு பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்களின் வரி உயர்விற்கு எதிராக சீனா மற்றும் ஐரோப்பிய யூனியனின் பதிலடி நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா அறிவிப்பு.

புதன் கிழமை வர்த்தக அமைச்சர் அறிவித்துள்ள கட்டண விவரத்தின்படி ஆப்பிள் வகைகள் மற்றும் பருப்பு வகைகள் வால்நட், பாதாம் மற்றும் கடல்பாசி வகைகள் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான பொருட்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் இரும்பு பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது.

இந்தியா கடந்த மாதம் உலக வர்த்தக மையத்திடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளது.

அதில் வரி உயர்த்தப்பட உள்ள பொருட்களின் விவரமுமடங்கும். "இந்த புதிய வரி உயர்வு அமெரிக்காவின் கொள்கைக்கு எதிரான முடிவாகும். சில பொருட்கள் தவிர மற்ற அனைத்தும், ஆகஸ்ட் மாதம் 4 லில் நடைமுறைப்படுத்தப்படும்." என ஸ்டீல் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி கூறினார்.

அமெரிக்காவிற்கு எதிரான வரி அதிகரிப்பு நடவடிக்கை உலக அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய அதிர்வை ஏற்படுத்தும்.

இவ்வரிவிதிப்பினால் அமெரிக்கா தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.

 
.