This Article is From Nov 21, 2018

இந்தியா - ரஷ்யா ஒப்பந்தம் : ரூ. 3,500 கோடியில் 2 போர்க்கப்பல்கள்

ஒப்பந்தப்படி போர்க்கப்பல்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், பொருட்கள் உள்ளிட்டவற்றை ரஷ்யா வழங்கி விடும்

இந்தியா - ரஷ்யா ஒப்பந்தம் : ரூ. 3,500 கோடியில் 2 போர்க்கப்பல்கள்

கோவா பி.எஸ்.யு. நிறுவனத்திற்கும் ரஷ்யாவின் ரோசோபோரான் எக்போர்ட்டுக்கும் இடையே ப்ராஜெக்ட் முடிவாகியுள்ளது.

New Delhi:

இந்தியா - ரஷ்யா இடையே போர்க்கப்பல்களை தயாரிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. ரூ. 3,500 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்படவுள்ளன.

கோவாவில் போர்க்கப்பல் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கட்டமைக்கும்பணியை கோவாவின் பி.எஸ்.யு நிறுவனமும், ரஷ்யாவின் ரோசோபோரான் எக்போர்ட் நிறுவமும் மேற்கொள்ளவுள்ளது.

ஒப்பந்தப்படி டிசைன், டெக்னாலஜி மற்றும் முக்கிய உபகரணங்கள் ஆகியவை ரஷ்யாவின் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு அளிக்கப்படும்.

ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
 

.