This Article is From Mar 08, 2019

ரஷ்யாவிடமிருந்து அகுலா வகை நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்கு பெற இந்தியா ஒப்பந்தம்!

அகுலா வகையை சேர்ந்த இந்த நீர்மூழ்கி கப்பல், சக்ரா 3 என்று அறியப்படுகிறது. இந்த நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா இந்தியவிடம் வரும் 2025ஆம் ஆண்டு ஒப்படைக்கும்.

ரஷ்யாவிடமிருந்து அகுலா வகை நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்கு பெற இந்தியா ஒப்பந்தம்!

ரஷ்யாவிடமிருந்து இந்தியா குத்தகைக்கு பெறும் 3வது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.

ஹைலைட்ஸ்

  • அகுலா வகை நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா இந்தியாவுக்கு 2025ல் ஒப்படைக்கும்.
  • ரஷ்யாவிடமிருந்து இந்தியா குத்தகைக்கு பெறும் 3வது நீர்மூழ்கிக் கப்பல்.
  • சக்ரா 2 நீர்மூழ்கியின் குத்தகை 2022ல் முடிவடைகிறது.
New Delhi:

அணுசக்தியால் இயங்கக்கூடிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை, 3 பில்லியன் டாலருக்கு 10 ஆண்டுகள் இந்தியா குத்தகைக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகுலா என்ற வகையை சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல், 2025ல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கப்பல், 'சக்ரா - 3' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா குத்தகைக்கு பெறும் 3வது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.

பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், 2012ம் ஆண்டில், 10 ஆண்டுகள் குத்தகையாக பெறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல், 'சக்ரா - 2' என்ற பெயரில், தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் குத்தகை காலம், 2022ல் முடிகிறது.

1988ல் ஐஎன்எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கி கப்பலையே ரஷ்யாவிடமிருந்து இந்தியா முதல்முறை 3 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்தது.

மேலும் இந்த கப்பல்கள் மருத்துவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் அமையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன

.