Read in English
This Article is From Sep 08, 2020

இந்திய ராணுவம் எல்லையை மீறவில்லை; சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு!

எந்த கட்டத்திலும் இந்திய இராணுவம் எல்லையை மீறவும் இல்லை, துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

நேற்று லடாக்கின் பாங்கோங் ஏரியின் தென் கரையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய வீரர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக சீனா கூறியுள்ளது. "சீன எல்லைக் காவலர்கள் நிலைமையை உறுதிப்படுத்த எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளது.

மேலும், நேற்றை தினம் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் துருப்புக்கள் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியினைக் கடந்து இந்திய ராணுவத்தின் நிலையை நெருங்க முயற்சித்தனர் என்றும், அதைத் தொடர்ந்து மிரட்டும் தோணியில் வானத்தினை நோக்கி துப்பாக்கியால் சீன ராணுவத்தினர் சுட்டனர் என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

கடுமையான ஆத்திரமூட்டல் இருந்தபோதிலும், இந்திய ராணுவம் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், பொறுப்பான முறையிலும் நடந்து கொண்டன. அமைதியைப் பேணுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இருப்பினும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

Advertisement

இராணுவ, இராஜதந்திர மற்றும் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கையில், பி.எல்.ஏ தான் ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறி ஆக்கிரமிப்பு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

எந்த கட்டத்திலும் இந்திய இராணுவம் எல்லையை மீறவும் இல்லை, துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.

Advertisement

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலானது சமீபக்காலங்களில் கூர்மையடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement