This Article is From Feb 15, 2020

'இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்' -துருக்கி அதிபருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் வெள்ளியன்று பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரில் நம் சகோதார சகோதரிகள் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

New Delhi:

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தருக்கி அதிபருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக பேசிய அவர், 'கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரில் நம் சகோதார சகோதரிகள் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்' என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

துருக்கி அதிபர் தெரிவித்த கருத்து தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், 'ஜம்மு காஷ்மீர் தொடர்பாக துருக்கி அதிபர் கூறிய கருத்து எதனையும் ஏற்க முடியாது. ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. 

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் துருக்கி அதிபர் தலையிடக் கூடாது. ஜம்மு காஷ்மீர் தொடர்பாக உண்மைத் தகவல்களை அறிந்து கொள்ளாமல் பேசக்கூடாது. பாகிஸ்தானில் இருந்து தீவிரவாத அச்சுறுத்தல் இந்தியாவுக்கும், தெற்காசிய பகுதிக்கும் பரவியுள்ளது' என்று கூறியுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக எர்டோகன் பாகிஸ்தானில் அளித்த பேட்டியில், 'ஜம்மு காஷ்மீரில் நம்முடைய சகோதர, சகோதரிகள் பல ஆண்டுகளாக கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இப்போது இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவர்கள்படும் துன்பம் அதிகரித்துள்ளது.

இன்றைக்கு காஷ்மீர் பிரச்னை நமக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் சமீபத்தில் உள்ளது. கட்சி வேறுபாடுகளை களைந்து அனைத்து தரப்பினரும் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். காஷ்மீரின் நீதி, அமைதிக்கு துருக்கி என்றைக்கும் துணை நிற்கும்' என்று கூறினார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின்போது துருக்கி அதிர் தய்யிப் எர்டோகன், ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். இதனையும் கண்டித்திருந்த மத்திய அரசு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என அவரை எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை எர்டோகன் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார். 

.