Read in English
This Article is From Sep 18, 2018

ரோகிங்கியா அகதிகளுக்கு இந்தியா நிவாரண உதவி

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisement
இந்தியா

7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியா மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் (கோப்புப் படம்)

Dhaka:

மியான்மரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரோகிங்கியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு எதிராக இராணுவ வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனால், வங்கதேசம், இந்தியா உட்பட நாடுகளில் கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியா மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், வங்கதேச முகாம்களில் உள்ள ரோகிங்கியா அகதிகளுக்கு, 1 மில்லியன் லிட்டர் எண்ணெய், மண்ணெண்ணெய், 20,000 அடுப்புகள் ஆகியவற்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது

வங்கதேச ரோகிங்கியா அகதிகளுக்காக இதுவரை மூன்று கட்டமாக நிவாரண பொருட்கள் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisement

இந்த ஆண்டு மே மாதம், பால் பவுடர், குழந்தைகளுக்கான உணவுகள், ரெயின்கோட், ஆகியவை இந்தியாவில் இருந்து வழங்கப்பட்டுள்ளது என்று வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement