This Article is From Oct 04, 2018

ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர வேண்டும்: சசிதரூர்

ஐரோப்பிய யூனியன், ஈரானுடன் வாணிபம் செய்ய புதிய முயற்சிகளை செய்து வருவதாக சசிதரூர் தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர வேண்டும்: சசிதரூர்

அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது பெருஞ் செலவை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும்.

Hyderabad:

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கடந்த புதனன்று பேசுகையில், தொடர்ந்து ஈரானிடமிருந்து எண்ணெய் பெருவதற்கான முயற்சிகளை தொடர வேண்டும்.

ஈரானிடமிருந்து மட்டுமே குறைவான விலையில் எண்ணெயை பெற முடியும் என்பதே அதற்கு காரணம். அமெரிக்கா பொருளாதார தடைகளை மீறி ஈரானுடனான வாணிபத்தை தொடர வேண்டும். முடிவில், வேறு வழி பிறக்கலாம்.

இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நடைபெற்ற உரையாடல் அமர்வில் கலந்து கொண்ட சசிதரூர் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்து கேட்டகப்பட்ட கேள்விகளுக்கும், இந்தியாவின் பொருளாதார நிலை குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் இவ்வாறு பதிலளித்தார்.

ஈரானிடமிருந்து மட்டுமே குறைவான விலையில் எண்ணெயை பெற முடியும். ஈரானுடானான வாணிபத்தை நிறுத்தி, அமெரிக்காவில இருந்து எண்ணெயை பெறும் போது, அது நமக்கு பெரும் விலையேற்றமாக இருக்கும். மேலும் இதுகுறித்து உறுதியான பதிலை நான் தெரிவிக்க முடியாது. ஏனெனில், அரசு என்ன நினைக்கிறது என்பது எனக்கு தெரியாது என்றார்.

.