This Article is From Nov 01, 2019

தீபாவளியன்று பட்டாசு வெடித்து அமெரிக்க வீதிகளை குப்பையாக்கிய இந்தியர்கள்?!#ViralVideo

ட்விட்டரில் வீடியோவை பதிவிட்ட சந்தியா என்பவர், பட்டாசு குப்பைகளை படம் பிடித்து 'இந்தியர்கள் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளியன்று பட்டாசு வெடித்து அமெரிக்க வீதிகளை குப்பையாக்கிய இந்தியர்கள்?!#ViralVideo

தீபாவளி கொண்டாட்டத்தால் குப்பையாக காட்சியளிக்கும் நியூஜெர்சி சாலை.

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் பட்டாசுகளை தாறுமாறாக வெடித்து வீதிகளை குப்பையாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் ஜோனல் சதுக்கத்தில் உள்ள இந்திய சதுக்கம் மற்றும் மேரியான் பகுதியில் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏராளமான குப்பைகள் சேர்ந்துள்ளன. 

இதனை ரோந்து வந்த போலீசார் குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையிலும், தண்ணீர் அடித்து சுத்தப்படுத்தவு செய்தனர். இதனை கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதுதொடர்பான வீடியோவை சந்தியா என்பவர் வெளியிட்டுள்ளார். 
 

:

அதில் அவர், 'இந்தியன் என்று அழைக்கப்படுவதற்கு வெட்கப்படுகிறேன். நியூ ஜெர்ஸி போலீசாருக்கு சல்யூட்.' என்று குறிப்பிட்டுள்ளார். 

சந்தியா வெளியிட்டுள்ள வீடியோவில்தான் குப்பைகளும், அதனை வேடிக்கை பார்க்கும் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது. 
 

.

நெட்டிசன் ஒருவர், 'வீடியோவுக்கு நன்றி. பட்டாசுகளை வெடித்து விட்டு குப்பைகளை அள்ளாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் வெகட்கப்பட வேண்டும். நான் எப்போதுதான் கற்றுக் கொள்ளப் போகிறோம்' என்று கூறியுள்ளார். 
.

இன்னொரு ட்விட்டர் பயனாளர், 'பட்டாசு வெடிக்கப்பட்ட இடம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. முழுவதும் புகை, சத்தம்தான் காணப்படுகிறது. இந்த சம்பவத்தை நியூ ஜெர்ஸி நிர்வாகம் முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

Click for more trending news


.