BrahMos is the first Indian missile whose life has been extended from 10 to 15 years. (file photo)
ஹைலைட்ஸ்
- ராக்கெட்டின் வாழ்க்கை காலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட்ட முயற்சி
- இந்த ஏவுகணைச் சோதனை வெற்றியால் பெரும் நிதியை சேமிக்க முடியும்
- இதுவரை மூன்று வகையான பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் வைத்துள்ளது
Bhubaneswar:
பிரமோஸ் க்ரூஸ் என்று சொல்லப்படும் ஏவுகணையை நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது இந்தியா. இந்தப் புதிய ஏவுகணைச் சோதனையின் மூலம், ராக்கெட்டின் வாழ்க்கை காலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒடிசா மாநிலத்தில் இருக்கும் சந்திப்பூர் கடல் பகுதியில் உள்ள மொபைல் லான்சர் மூலம் தான் இந்த ஏவுகணைச் சோதனை நடந்துள்ளது என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தகவல் கூறகின்றன.
இந்த ஏவுகணைச் தோதனை வெற்றி குறித்து டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கும் பிரமோஸ் குழுவுக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன். இது குறித்து ராணுவத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், `பிரமோஸ் க்ரூஸ் ஏவுகணையின் வாழ்க்கை காலத்தை அதிகப்படுத்தும் நோக்கில், கடந்த 21- 5- 2018 ஆம் தேதியன்று முதல் முறையாக இந்தியாவில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்தச் சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த பிரமோஸ் குழுவுக்கும், டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார்.
இந்தியாவில் முதல் முறையாக பிரமோஸ் ஏவுகணையின் வாழ்க்கை காலம் தான் 10 முதல் 15 ஆண்டு காலம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், `இந்த ஏவுகணைச் சோதனை வெற்றியால் பெரும் நிதியை இந்திய ராணுவத் துறையால் சேமிக்க முடியும்’ என்று விவரித்துள்ளார்.
இதுவரை மூன்று வகையான பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் அதன் ஆயுத இருப்பில் வைத்துள்ளது. இவை அனைத்துமே பிளாக்-3 என்ற வகையைச் சார்ந்தவை. இதில், தரைவழி தாக்கும் பிரமோஸ் ஏவுகணை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஃபைர் அண்டு ஃபர்கெட் வகை பிரமோஸ் ஏவுகணை, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பறந்து தரையில் இருக்கும் எதிரி தளவாடங்களையும் டார்கெட்டுகளையும் அழிக்கவல்லது. இந்த ஏவுகணை, தாழ்தள உயரத்தில் பறக்கும் என்பதால் எதிரிகளின் வான்வழி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.