இன்று காலை அக்னி- 5 சோதனை நடத்தியுள்ளது இந்தியா
ஹைலைட்ஸ்
- ஒடிசோ கடலோரத்தில் இருக்கும் அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடந்துள்ளது
- இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளது அக்னி- 5
- 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும்
New Delhi: ஆணு ஆயுதத்தைச் தாங்கிச் செல்லும் திறனுடனை அக்னி 5 ஏவுகணையை இன்று காலை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஆக்னி 5 ஏவுகணை மூன்று ஸ்டேஜும், 17 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அலகமும் கொண்டது. மேலும், 1. 5 டன் கொண்ட அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. 5,000 கிலோ மீட்டர் வரை இந்த ஏவுகணை பயணப்பட்டு, குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்.
ஒடிசா கடலோரத்தில் இருக்கும் டாக்டர் அப்துல் கலாம் தீவிலிருந்து இந்த ஏவுகணை, இன்று காலை 9.48 மணிக்கு ஏவப்பட்டது. ஏவுகணை, வானில் செலுத்தியதில் இருந்து இலக்கைத் தாக்கும் வரை பல உணரிகள், கேமராக்கள் மூலம் அதன் பாதை, பறக்கும் உயரும் என பல்வேறு விஷயங்கள் கண்காணிக்கப்பட்டன. இறுதியாக, குறிப்பிட்ட இலக்கை அக்னி- 5 துல்லியமாக அடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அரசு தரப்பு, `அக்னி- 5 ஏவப்பட்டதிலிருந்து அதன் ஒவ்வொரு அசைவையும் மிகத் துல்லியமாக ரேடார் மற்றும் பல அதி நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணித்தோம். மற்ற அக்னி வகை ஏவுகணைகளைப் போல இது அல்ல இது. மற்ற எல்லாவற்றையும் விட இதில் அதி நவீன தொழில்நுட்பம் நேர்த்தியாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை சரியாக தாக்கியது' என்று கூறப்பட்டது.
அக்னி வரிசையில் அக்னி- 5 வெற்றிகரமாக சோதனை செய்யப்படும் ஐந்தாவது ஏவுகணை. இதற்கு முன்னர் சோதனை செய்யப்பட்ட அக்னி- 1 700 கிலோ மீட்டரும், அக்னி- 2 2000 கிலோ மீட்டரும், அக்னி-3 மற்றும் 4 2500 கிலோ மீட்டரும் பயணப்பட்டு குறிப்பிட்ட இலக்கை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பிடிஐ கொடுத்த தகவல்களின் அடிப்படையில்)