This Article is From Aug 20, 2018

அதி தொழில்நுட்பம் கொண்ட புதிய ரக ஆயுதங்களை சோதனை செய்த இந்தியா..!

எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கும் இந்த ஆயுத ஏவுகணைகள் நேற்று சந்தன் பகுதியில் சோதனை செய்யப்பட்டது

அதி தொழில்நுட்பம் கொண்ட புதிய ரக ஆயுதங்களை சோதனை செய்த இந்தியா..!
New Delhi:

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாராகி உள்ள ‘ஸ்மார்ட் ஆன்டி ஏர்ஃபீல்டு வெபன்’ என்னும் போர் தாக்குதல் ஆயுதம் தாங்கியையும் ‘ஹெலினா’ என்றொதொரு ஏவுகணையையும் இன்று ராஜஸ்தானில் வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது இந்தியா.

எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கும் இந்த ஆயுத ஏவுகணைகள் நேற்று சந்தன் பகுதியில் சோதனை செய்யப்பட்டது. நிலத்தில் உள்ள எதிரிகளை சரியான தூரத்தில் பாய்ந்து துல்லியமாகத் தாக்கக்கூடியதாக இந்த ஏவுகணைகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதி வரையில் மூன்று கட்டமாக இச்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்துச் சோதனைகளும் வெற்றிகரமாகவே நிறைவடைந்துள்ளன.

இதுவரையில் இந்த ஆயுதம் எட்டு மேம்பாடு ஒத்திகைகளைக் கடந்துள்ளது. பல்வேறுகட்ட சோதனை ஓட்டங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இச்சோதனை நிகழ்வுகளை பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய விமானப் படையின் முக்கிய அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

er5s5og

நேற்று ஹெலினா ஏவுகணை விமானம் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொக்ரான் பகுதியில் இருந்து சோதிக்கப்பட்டது. மிகத்துல்லியமாக இலக்கைக் கணித்து அதிகத் துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது இந்த ஆயுதம். ஏவுகணையில் அனைத்து நடவடிக்கைகளும் திற்ன்களும் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏவுகணை உலகிலேயே முற்றிலும் மேம்பட்ட ஆயுதமாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வை வெற்றிகரமாக நிகழ்த்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டியுள்ளார்.

.