This Article is From Sep 08, 2018

சிறுமியைக் தத்தெடுத்துக் கொன்ற பெற்றோரின், இந்திய குடியுரிமை ரத்து

தத்தெடுக்கப்பட்ட ஷெரின் என்ற சிறுமி, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிணமாக மீட்க்கப்பட்டார்

சிறுமியைக் தத்தெடுத்துக் கொன்ற பெற்றோரின், இந்திய குடியுரிமை ரத்து
Houston:

அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரில், பீஹாரில் இருந்து தத்தெடுக்கப்பட்ட ஷெரின் என்ற சிறுமி, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிணமாக மீட்க்கப்பட்டார். ஷெரினை இந்திய-அமெரிக்கர்களான வெஸ்லி - சினி தம்பதியினர் தத்தெடுத்தானர்.
அழுகிய நிலையில் ஷெரினின் உடல் கிடைப்பதற்கு 2 வாரங்களுக்கு முன் ஷெரினைக் காணவில்லை என்று வெஸ்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களைக் கொடுத்துள்ளார். பால் குடிக்க மறுத்ததால், அதிகாலை 3 மணிக்கு ஷெரினை வெளியில் நிற்க வைத்து தண்டனை வழங்கியதாக கூறினார். பின்னர், ஷெரினை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, விழா ஒன்றுக்கு சென்றதாகக் கூறினார்.

விசாரணையின் முடிவில் வெஸ்லி தம்பதியினர் ஷெரினை கொன்றது தெரியவந்தது. அவர்கள் மீது ஹோஸ்டனில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தற்போது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என்ற அவர்களின் குடியுரிமத்தை பறித்துள்ளது இந்தியா. அவர்களது மனிதாபிமானமற்ற செயல், இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய கவுன்சில் ஜெனரல் அனுப்பம் ரே தெரிவித்துள்ளார்.

.